முதலைகளை பற்றி நீங்கள் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்! முதலைகளை ஆசியா, ஆப்பிரிக்கா , அமெரிக்கா , ஆஸ்திரேலியா நாடுகளில் அதிகமாக காணலாம் உலகில் மொத்தம் 26 வகை முதலை இனங்கள் உள்ளது என கூறுப்படுகிறது அளவில் மிகச் சிறிய முதலை குள்ள முதலை எனவும் பெரிய முதலை உப்பு நீர் முதலை எனவும் அழைக்கப்படுகிறது உலகில் உப்பு நீர் முதலைகளின் எண்ணிக்கை மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளதாம் சிறிய முதலையின் எடை 13 முதல் 15 பவுண்ட் வரை எடை இருக்குமாம் அதே பெரிய முதலையின் எடை 2000 பவுண்ட வரை இருக்குமாம் முதலை ஒரே நேரத்தில் 10 முதல் 60 முட்டைகள் வரை இடுமாம் சில இனங்களை சார்ந்த முதலைகள் 75 ஆண்டுகள் வரை உயிர் வாழுமாம் அலிகேட்டர் (Alligator ) குரோக்கோடைல் (Crocodile) ஆங்கிலத்தில் கூறப்படும் இரு பெயர்களும் இரண்டு வகை முதலையாகும் அலிகேட்டர் முதலையின் தாடை U வடிவிலும், குரோக்கோடைல் முதலையில் தாடை V வடிவிலும் இருக்குமாம்