சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் பண்புகளுக்கு பெயர் பெற்றது மஞ்சள் மஞ்சள் தூளை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், இருமல் குறையும் இஞ்சித் துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து இஞ்சி தேநீர் தயாரிக்கவும் சுவைக்காக சிறிது தேன், எலுமிச்சை பிழிந்து கொள்ளவும் நீலகிரித் தைலம் சேர்த்து ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும் துளசியை தண்ணீரில் அலசி கொதிக்க வைத்து காலையிலும் மாலையிலும் குடிக்கலாம் நாட்டு மருந்து கடைகளில் அனு தைலம் கிடைக்கும் ஒரு சொட்டு அனு தைலத்தை மூக்கில் இட்டுக்கொண்டால், மூக்கடைப்பு சரியாகும் சுக்கு, மிளகு, திப்பிலி, என்னும் மூன்று மூலிகைகள் திரிகடுகம் என அழைக்கப்படுகிறது இந்த கலவையில் தேநீர் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்