எந்த செயல் வியர்வையை வெளியேற்றுகிறதோ, ஆழமாக மூச்சுவிட உதவுகிறதோ அது உடலுக்கு மிகவும் நல்லது



இதனால் உடல் வலுவாகும், நல்ல ஹார்மோன்கள் சுரக்கும்



அத்துடன் உடல் ரிலாக்ஸ் ஆகி, மன அழுத்தம் குறையும்



மன அழுத்தம் உள்ளவர்கள் ஒரு நாள் மட்டும் உடற்பயிற்சி செய்தால் எதுவும் ஆகாது



தினமும் தொடர்ந்து செய்து வந்தால் பெரிய மாற்றம் தெரியும்



உடற்பயிற்சி, நியூரோபிளாஸ்டிசிட்டியை ஊக்குவிக்கிறது



பின், நியூரோபிளாஸ்டிசிட்டி மூளையின் செயல்பாடுகளை மாற்றும்



வெளிப்புற காரணிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு மூளையை அட்ஜஸ்ட் செய்துவிடும்



இதனால் மன அழுத்தம் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது



ஓட்டப் பயிற்சி, ஹைக்கிங், யோகா, நீச்சல் பயிற்சி, சைக்கிளிங் செய்யலாம்