திடீர் ஓய்வை அறிவித்த சிஎஸ்கே வீரர் முரளி விஜய்! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் அறிமுக வீரராக களமிறங்கி இருந்தார் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தமிழ்நாடு அணிக்காக முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விளையாடினார் கடைசியாக 2020-ம் ஆண்டு ஐபிஎல் டி 20 கிரிக்கெட்டில் சி.எஸ்.கே அணிக்காக விளையாடினார் முரளி விஜய் 61 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 3,982 ரன்களை சேர்த்துள்ளார் 12 சதங்களும், 15 அரை சதங்களும் அடித்திருந்தார் 17 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 339 ரன்களையும், சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் 169 ரன்களையும் சேர்த்தார் 2010 சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு சதம், 2 அரை சதங்களுடன் 458 ரன்கள் குவித்தார் பல ஆண்டுகளாக, இவர் ஃபார்மில் இல்லை 38 வயதான முரளி விஜய், ஓய்வு குறித்து ட்விட்டரில் பதிவை வெளியிட்டுள்ளார்