டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்



முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது



டெவோன் கான்வே மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் அரைசதம் அடித்து உதவினர்



177 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது



இஷான் கிஷான் 4 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்



சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்



சூர்யகுமார் யாதவ் 47 ரன்களில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 21 ரன்களில் வெளியேறினார்



வாஷிங்டன் சுந்தர் டி20 வரலாற்றில் தனது முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார்



இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது



21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா