ஜமீன்தார்களின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் வேப்பூர் மக்கள் அதில் இருந்து தப்பிக்க ஆங்கிலேயர்களுக்கு மஞ்சள் பிசாசு என்று அழைக்கப்படும் தங்கத்தை எடுக்க உதவுகின்றனர்
அதே ஆங்கிலேயர்கள் தங்களை அடிமைப்படுத்த நினைக்கையில் அவர்களை எதிர்த்து தங்கள் நிலத்திற்காக போராடுகிறார்கள்
கதாநாயகன் தங்கலான் தங்கத்தை கண்டுபிடித்தானா? தங்கம் அவன் மக்களுக்கு அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையைப் பெற்று தந்ததா? என்பதே கதை
தங்கலானின் முப்பாட்டனான காடையன் சோழர்களுக்கு தங்கத்தை எடுக்க உதவி செய்கிறான். அப்போது தங்கத்தை பாதுகாக்கும் நாகர்களின் தலைவியான ஆரத்தியை தங்கலான் கொன்றுவிட அவளது ரத்தம் படரும் இடமெல்லாம் தங்கமாக மாறுகிறது
நிகழ்காலத்தில் இதேபோல் ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்யும் தங்கலானின் கண்களுக்கு மட்டும் ஆரத்தி தெரிகிறாள். ஆரத்தி தங்கலான் ஆகிய இரு கதாபாத்திரங்கள் வழியாக வரலாற்றை இணைக்க முயற்சித்துள்ளார் ரஞ்சித்
தங்கத்தை தேடி அலையும் போது ஏற்படும் மர்மமான சவால்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நிறைய இடங்களில் நினைவுபடுத்துகிறது. வாய்மொழிக் கதைகளில் வருவது போல் நிறைய இடங்கள் மேஜிக்கல் ரியலிஸம் பாணியில் சொல்லப்பட்டிருப்பது ஒரு சிறப்பான முயற்சி
புத்தர் நாட்டார் கதைகளின் வழி முனியாக வருவது , சைவம் வைணவத்தின் ஆதிக்கத்தை சுருக்கமாகவும் ஒரு விதமான நகைச்சுவையுடனும் சொல்லிச் செல்கிறார்கள்
தங்கலான் மற்றும் கங்கம்மா இடையில் இருக்கும் காதல் காட்சிகள். வெள்ளைக்காரர் கொடுத்த துணியை போட்டுக்கொண்டு ஜாங்கோ படத்தில் வருவது போல் தங்கலான் குதிரையில் வருவது. பெண்கள் அனைவரும் முதல் முறையாக ரவிக்கை அணியும் காட்சிகள் பா ரஞ்சித் இப்படத்தில் வைத்திருக்கும் ஸ்பெஷல் மொமண்ட்ஸ்
வழக்கமான கமர்ஷியல் சினிமாவைப் போன்ற திரைக்கதை அமைப்பு இல்லை என்றாலும் தங்கலான் படம் காட்டும் மக்களும் அவர்களின் வாழ்க்கை முறையும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக காட்டப்பட்டிருக்கின்றன
நிகழ்காலமும் கடந்த காலமும் சேர்ந்து நடக்கும் பகுதிகள் ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரு பிரம்மாண்டமான அனுபவமாக திரள்கிறது
ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை போர் முரசைப்போல் ஒவ்வொரு காட்சியையும் உயிர்ப்புடன் வைத்துக்கொண்டே இருக்கிறது
தங்கலான் என்கிற ஒருவன் தன் மக்களின் விடுதலைக்காக போராடிய வரலாற்றை தங்கலான் படம் உணர்வுப் பூர்வமாக சொல்கிறது.