ஜொலித்ததா? சோதித்ததா? ஸ்டார் பட குட்டி விமர்சனம் இதோ! இளன் இயக்கத்தில் கவின், அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் ஆகியோர் நடிப்பில் உருவான படம் ஸ்டார் நடுத்தர குடும்பத்தை சார்ந்த கவின், நடிகராக ஆசைப்படுகிறார். இது நிறைவேறுகிறதா? இல்லையா? என்பதே கதை கவினின் தனிப்பட்ட உறவுகளில் நடக்கும் சிக்கல்களே படத்தில் அதிகமாக இடம்பெற்றுள்ளது சினிமாவில் நடிக்க கவின் எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதை இன்னும் அழுத்தமாக காண்பித்து இருக்கலாம் கலையரசனாக நடித்த கவினும் அவருடன் நடித்த மற்ற கலைஞர்களும், கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர் யுவனின் கம்-பேக்கிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, ஸ்டார் படம் ட்ரீட் கொடுத்துள்ளது மனதை வருடும் மெல்லிய பின்னணி இசை, பாடல்கள் சூப்பராக இருந்தது ஸ்டார் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ட்விஸ்ட் வைத்து இருக்கிறார் இயக்குநர் இலன் ஆக, இந்த கோடை விடுமுறையில் பொழுதை கழிக்க ஸ்டார் படத்தை குடும்பத்துடன் சென்று காணலாம்