இது அரசியல் படமோ அல்லது தமிழ் விடுதலைக்கான படமோ இல்லை, இது ஒரு காதல் கலந்த அரசியல் படம் இயக்குநர் அமீர் ஹீரோவாகவும், சாந்தினி ஹீரோயினியாகவும் நடித்துள்ளனர் படத்தில் லாஜிக் மிஸ்டேக் உள்ளதா, லாஜிக் மிஸ்டேக்கில் படம் உள்ளதா என்பதே தெரியவில்லை இசையமைப்பாளர் வித்யாசாகர் இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது முன்னாள் அமைச்சரை கொலை செய்த பழி அமீர் மீது விழ, அந்த கொலை பழியை அமீர் நீக்கினாரா? என்பதே படத்தின் கதை ஆனந்த ராஜ், இமான் அண்ணாட்சி, ராஜ் கபூர் ஆகியோரின் காமெடி சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது முதல் பாதியில் ஹீரோயின் சிறப்பாக நடித்திருந்தாலும், இரண்டாம் பாதியில் நடிப்பு பேசும் அளவிற்கு இல்லை திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்துவிட்டு, காட்சிகளில் சொதப்பியது நன்றாக தெரிகிறது படத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பான காட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தது வித்தியாசமான அரசியல் படம் பார்க்க நினைப்பவர்கள் மட்டும் இந்த படத்தை பார்க்கலாம்