ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் வர்மா உள்ளிட்ட பலரும் நடித்த படம் ஜப்பான் ஹை - கிளாஸ் திருடன் - காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் சடுகுடு ஆட்டம்தான் இப்படத்தின் கதை அமைச்சர் குடும்பம் சார்ந்த நகை கடையில் கொள்ளை சம்பவம் நடக்கிறது ஒரு பக்கம் சுனில், மறுபக்கம் விஜய் மில்டன் என கார்த்தியின் வாழ்வில் இருவரும் என்ட்ரி கொடுக்கின்றனர் கொள்ளை சம்பவத்தின் உண்மை பின்னணியே படத்தின் மீதிக்கதையாகும் ஜப்பான் முனியாக கார்த்திதான் படத்தை ஆணிவேராக தாங்குகிறார் மற்ற நடிகர்கள் கதைக்கு தேவைப்பட்டிருக்கிறார்களே தவிர நடிப்பதற்கு பெரிய அளவில் காட்சிகளே இல்லை ஆரம்பத்தில் வேகமாக போன கதை, போக போக பொறுமையாக செல்கிறது கமர்ஷியல் படத்திற்கான அனைத்தும் இதில் இருந்தாலும், அனைத்துமே தனித்து இருப்பது இதன் மைனஸ் லாஜிக் இல்லாமல், தீபாவளி பண்டிகையை படத்துடன் கொண்டாட விரும்பினால் ஜப்பான் படத்தை பார்க்கலாம்