நம்மை நமக்கே பிரபதிபலிக்கு கண்ணாடியை வீட்டில் வைப்பதற்கென்று சில இடங்கள் உள்ளது



அதுமட்டுமல்லாமல் விட்டில் பணம் தங்குவதற்கும் கண்ணாடி எங்கு இருப்பதிற்கும் சம்மந்தம் இருக்கிறது என கூறப்படுகிறது



படுக்கை அறையில் கண்ணாடி வைப்பதை தவிர்க்கலாம்



ஒரு வேளை படுக்கை அறையில் கண்ணாடி இருந்தால் அதை திரை போட்டு மூடி வைக்கலாம்



குளியல் அறையில் வைப்பதை தவிர்க்கலாம். குளிக்கும் போது நமது பிம்பம் கண்ணாடியில் தெரியாதவாறு இருக்க வேண்டும்



அதற்கு பதிலாக குளியல் அறையில் தெற்கு அல்லது மேற்கு திசையில் கண்ணாடி வைக்கலாம்



நிலை வாசலில் கண்ணாடி மாட்டி வைப்பதால் வீட்டில் உள்ள குடும்பத்தினர் இடையே பிரச்சனைகள் எழலாம்



நிலைவாசலில் கண்ணாடி வைப்பதை தவிர்க்கலாம்



வீட்டினுள் மேற்கு மற்றும் தெற்கு திசையில் உள்ள சுவர்களில் கண்ணாடி வைக்கலாம்



இந்த இடத்தில் கண்ணாடிகளை வைத்தால் வீட்டில் செல்வங்கள் பெருகும் என்பது நம்பிக்கை