பலருக்கும் முடி கொட்டும் பிரச்சினை இருக்கிறது



நாளடைவில் வழுக்கை விழுந்துவிடும்



இதனால் கோடிக்கணக்கான பணத்தை மக்கள் செலவிட்டு வருகின்றனர்



எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் அதிருப்திதான் மிஞ்சுகிறது



நார்த் வெஸ்டர்ன் மருத்துவ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளனர்



மயிர்க்காலின் ஸ்டெம் செல்கள் முதிர்ச்சி அடைவதால் தலை முடி வளர்ச்சி தடுக்கப்படுகிறதாம்



miR-205 எனப்படும் RNAவை பயன்படுத்தி இந்த செல்களை மென்மையாக்கினால் முடி வளர்ச்சி தூண்டப்படுமாம்



இந்த ஆராய்ச்சி எலியின் மீது நடத்தப்பட்டுள்ளது



இனி நடக்கவிருக்கும் ஆராய்ச்சியில்தான், miR-20, மனிதர்களின் முடி வளர்ச்சியை தூண்டுமா என்பது தெரியும்



அடுத்த கட்ட ஆராய்ச்சி நானோ துகள்கள் மூலம் நடத்தப்படும்