கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயில் கடுகு, 1 கொத்து கறிவேப்பிலை தாளிக்கவும்



துண்டுகளாக நறுக்கிய மீடியம் சைஸ் பூசணியை இதில் சேர்த்து கிளறவும்



அதில் மஞ்சள், மிளகாய், மல்லி ஆகிய தூள் உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் சேர்க்கவும்



இதை 10 நிமி வெந்ததும் இறக்கவும். வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி கொள்க



கடாயில் 1 1/2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 1/4 மூடி துருவிய தேங்காய், கறிவேப்பிலை சேர்க்கவும்



தேங்காய் பொன்னிறமகும் வரை வதக்கி இவற்றுடன் வேர்க்கடலை சேர்த்து அரைக்கவும்



கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அரைத்த மசாலாவை சேர்த்து வதக்க வேண்டும்



தேவையான அளவு தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும்



வேகவைத்த பூசணிக்காயை இதில் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்



கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், சுவையான நெய் பூசணி தயார்