இந்த காலத்தில் பலருக்கும் குடி பழக்கம் உள்ளது உணவு பழக்கமும் மோசமாகவுள்ளது பல காரணங்களால் உடலின் முக்கிய உறுப்பான கல்லீரல் பாதிப்படைகிறது கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறிகளை காணலாம்.. தோலில் அரிப்பு - கல்லீரல், இரத்தத்தை சுத்திகரிக்கவில்லை என்றால் தோலில் அரிப்பு வரும். மஞ்சள் நிற கண்கள் - கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பிலிரூபின் குவிந்தால் மஞ்சள் காமாலை வரும் வெளிர் நிற மலம் - . பைல், கல்லீரலிருந்து சுரக்கும். ஜீரணத்திற்கு உதவும் பைல் சுரக்கவில்லை என்றால் இப்படியாகும் சிறுநீரின் நிறம் மஞ்சளாக இருக்கும் - கல்லீரல் சுத்திகரிக்கும் வேலையை சரியாக செய்யவில்லை என்றால் சிறுநீர் மஞ்சளாக இருக்கும் வாந்தி - கல்லீரல் செயலிழந்தால் உணவு செரிமானம் ஆகாது. இதனால் வாந்தி வரும் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்