தாமரைப் பூ என்றாலே, அது அலங்காரத்திற்கு மட்டும்தான் பயன்படும் என நம்மில் பலர் நினைப்போம் தாமரை தன்னுள் ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது என்பது பலருக்கும் தெரியாது தாமரைப் பூவின் இலைகள், பூ, வேர், விதை ஆகியவற்றில் பல நன்மைகள் உள்ளன தாமரை தண்டில் நிறைந்துள்ள நன்மைகளை பற்றி பார்ப்போம்.. தாமரை தண்டை கொண்டு ஆசிய மற்றும் ஜப்பானிய சமையல்களில் நிறைய உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது தாமரை தண்டில் இருக்கும் கோலின், இரும்புச் சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது அழற்சியால் ஏற்படும் காய்ச்சலை போக்க உதவுகிறது தாமரை தண்டை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, ஒவ்வாமை ஏற்படலாம் பயன்படுத்துவதற்கு முன்பு அழற்சி ஏற்படுத்துமா என்பதை அறிந்து கொண்டு பயன்படுத்துங்கள்