இந்திய கிரிக்கெட் வீரர் சஹால் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல்

யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா. இவர் நடனக்கலைஞர்சாஹல் மற்றும் தனஸ்ரீ இருவரும் டிசம்பர் 2020 இல் குர்கானில், குடும்பத்தினர் சூழ திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டுவருகிறது.

 34 வயதான யுஸ்வேந்திர சாஹல் 72 ஒருநாள் போட்டிகளில் ஆடி 121 விக்கெட்டுகளையும்,

80 டி20 போட்டிகளில் ஆடி 96 விக்கெட்டுகளையும், 160 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 205 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மாடல், பல் மருத்துவர் மற்றும் நடன ஆசிரியராக உள்ள தனஸ்ரீ வர்மாவின் சொத்து மதிப்பு சுமார் 24 கோடி என கூறப்படுகிறது.

ஐ.பி.எல். உள்ளிட்ட கிரிக்கெட்ட் போட்டிகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 7 முதல் 9 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும், சாஹலின் சொத்து மதிப்பு சுமார் 70 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

சாஹல் லாபகரமான பிராண்ட் விளம்பரங்களில் ஒபந்தம், பல்வேறு வணிக முயற்சிகளில் முதலீடு செய்துள்ளார். இவற்றின் மூலமும் அவருக்கு வருமான கிடைக்கிறது.

அவரது சொத்து மதிப்பு ரூ.70 முதல் 80 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. Porsche Cayenne S, Mercedes-Benz C-Class, Rolls Royce and Lamborghini Centenario ஆகிய சொகுசு கார்களும் அவரிடம் இருக்கிறதாம்..