சாப்பாட்டுக்கு பிறகு சாப்பிட வேண்டிய பழங்கள்!

Published by: ஜான்சி ராணி

ஆப்பிள்

நார்ச்சத்து நிறைந்த பழம். மேலும் இது நமது வயிற்றில் எளிதில் ஜீரணமாகும். முட்டைக்கோஸ் மற்றும் முளை கட்டிய பயறுகளின் சாலட்டில் சில துண்டுகள் ஆப்பிள்களைச் சேர்த்து காலை, மாலை வேளையில் சாப்பிடலாம்.

தர்பூசணி

தர்பூசணி தோலில் சிட்ருலின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது தசை வலியை எளிதாக்க உதவும். அதனால் மதியம் சாப்பிடும்போது தண்ணீருக்கு பதிலாக இந்த தர்பூசணியின் ஜூஸை குடிக்கலாம்.பொதுவாக தண்ணீர் கனிகளை மாலை 5 மணிக்கு மேல் சாப்பிடக் கூடாது.

எலுமிச்சை

எலுமிச்சை உங்கள் வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டுகிறது. அதில் தில் உற்பத்தியாகும் உமிழ்நீர் உங்கள் செரிமானத்தை எளிதாக்குகிறது. உணவோடு ஒரு கிளாஸ் எலுமிச்சைப் பழத்தை ஜூஸாக் செய்து குடிக்கலாம்.

பெர்ரி

ராஸ்பெர்ரி,ஸ்டராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரிகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன. இதை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

வாழைப்பழம்

உங்கள் பற்களுக்கு நல்ல ஊட்டச்சத்துக் கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனை மதிய உணவின்போது கடைசி யாக சாப்பிடலாம்.

அவகேடோ

பழங்களில் ஆரோக்கியமான கொழுப்பு கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் அவற்றை தனியாக சாப்பிட லாம் அல்லது மற்ற உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம். அவகேடோ டா பழம் வயிற்றையும் நிறைக்கும் என்பதால் உணவைக் கட்டுப்படுத்தி பழம் உண்டு டயட் இருப்போர் எடுத்துக்கொள்ளலாம்.

கிவிஸ்

இந்த சிறிய பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நொதிகள் நிறைந்துள்ளன. அவை செரிமானம், நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் உள்ளது. இது செரி மான நொதியாக செயல்படுகிறது. மற் றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் ரசம் வைத்து சாப்பிட்டால் செம்ம ருசியாக இருக்கும்.

சாத்துக்குடி

எலுமிச்சையைப் போலவே சாத்துக்குடியும் உமிழ்நீர் சுரப் பிகளைத் தூண்டுகிறது.உணவோடு ஒரு கிளாஸ் எலுமிச்சைப் பழத்தை ஜூஸாக செய்து குடிக்கலாம்.