வெள்ளை நிறத்தில் இருக்கும் உணவு பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலில் கால்சியம் சத்து இருந்தாலும் அதில் சர்க்கரையுடன் குடிப்பது நல்லது இல்லை.
சர்க்கரையில் ஊட்டச்சத்து ஏதும் இல்லை. அதை சாப்பிடுவது பரிந்துரைக்கப்படவில்லை. ஒரு நாளை 2 டீஸ்பூன் சர்க்கரை சாப்பிடுவது நல்லது. அதிகமாக சாப்பிட்டால் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
தினமும் எவ்வளவு சர்க்கரை சாப்பிடுகிறீர்கள் என்பதை கண்காணிக்கவும்.
உப்பு அளவோடு சாப்பிடுவது நல்லது. சோடியம் அதிகமாக சாப்பிடுவது டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்,
சர்க்கரை, மைதா ஆகிய உணவுகளை அளவோடு சாப்பிடலாம் அல்லது சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
அரிசியை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பதில்லை. அளவோடு சாப்பிடலாம்.
இவற்றை உண்ணுவதை தவிர்க்க சிறுதானிய மாவு ஆகியவற்றிற்கு மாறலாம்.