இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எள் - இவ்வளவு நன்மைகளா?
தினமும் எள் சாப்பிடுவது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆரோக்கியமான கொழுப்பு, புரோட்டீன், வைட்டமின் பி, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
எள் மோனோ - சாச்சுரேட்ட கொழுப்பு நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும். ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது இதய செயல்பாடுகள் மேம்படுத்த உதவும்.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். கால்சியம், மெக்னீசியம் எலும்பு தேய்மான ஏற்படாமல் இருக்க உதவும்.
ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் தேவையை 2 டேபிள் ஸ்பூன் எள் சாப்பிட்டால் பாதியளவு கிடைக்கும் என்கின்றனர்.
இது சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக வளர உதவும். வைட்டமின் டி, Fatty Acids ஆகியவை சரும் பொலிவுடன் இருக்க உதவும்.