தொடர்ந்து ஏழு வருடம் நண்பர்கள் வாழ்நாள் நண்பர்கள் சண்டைகள் வந்தாலும் சரிசெய்யத்தான் பார்ப்பார்கள் விலகி செல்ல மாட்டார்கள் உங்களுடன் இல்லாத போதும் அவர்களை நினைப்பீர்கள் தினமும் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை புலம்பும் சமயங்களில் கண்டிப்பாக அவர் உங்களுடன் இருப்பார் எந்த சூழ்நிலையிலும் உங்களை தனித்து விடவே மாட்டார்கள் நீங்கள் செய்யும் தவறை உங்கள் எதிரே நின்று சுட்டிக்காண்பிப்பது நண்பர் மட்டுமே நண்பனிடம் மட்டும் உங்கள் துக்கத்தை மறைக்கவே முடியாது கண்கள் பேசும் பாஷையை நண்பர் நன்றாகத் தெரிந்துவைத்திருப்பார் தவறை நேருக்கு நேர் கூறும் உங்கள் நண்பனை மட்டும் அலட்சியப்படுத்தாதீர்கள்