நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் மோசமான பழக்கங்கள்

Published by: விஜய் ராஜேந்திரன்

நீரிழிவு நோயாளி

உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் விகிதம் அதிகரித்து வருகின்றது

மெட்டபாலிசம்

நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் இந்தியர்கள், மற்ற மக்களுடன் ஒப்பிடும்போது இளம் வயதிலேயே மெட்டபாலிச பாதிப்பை அடைகின்றனர்

இன்சுலின் எதிர்ப்பு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் பொதுவாக நீரிழிவு நோயின் தொடக்கத்தில் இன்சுலின் எதிர்ப்பை கொண்டுள்ளனர்

சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்

கவனமாக சாப்பிடாமல், வெள்ளை மாவு, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், சர்க்கரை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்

தூக்கம்

மோசமான தூக்க பழக்கம் மற்றும் அதிக மன அழுத்தம் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது நல்லதல்ல

உடல் பருமன்

மைதா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை ஊக்குவிக்க உதவும்

புகைபிடிப்பது

சிகரெட், பீடி, ஹூக்கா அல்லது வேப்பிங் போன்ற வடிவங்களில் புகைபிடிப்பது நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன

மன அழுத்தம்

மன அழுத்தத்தைக் கையாள்வதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அது உங்கள் இரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கலாம்

உடற்பயிற்சி

வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்ய, கலோரிகள் குறையும், இன்சுலின் உணர்திறன் மேம்படும்