பெர்ஃப்யூம் தேர்வு செய்யும்போது இதை கவனிங்க!

Published by: ஜான்சி ராணி

டெஸ்ட் செய்து வாங்கவும்.
மணிக்கட்டு பகுதியில் ஸ்பிரே செய்து எரிச்சலோ, அலர்ஜியோ ஏற்படுகிறதா என கவனிக்கவும்.


தரமான பிராண்ட் என்பதை உறுதி செய்யவும்.

எக்ஸ்பயரி டேட் செக் செய்யவும்.

ஃப்ராக்ரன்சை ஸ்மெல் டெஸ்ட் செய்யவும்.

குறைந்த PH அளவு, உதாரணமாக 5-6 இருந்தால் நல்லது.

PH அளவு அதிகமுள்ள பெர்ஃப் யூமை நேரடியாக உடலில் பயன் படுத்தக் கூடாது. ஆடை அணிந்த பின் ஸ்ப்ரே செய்யலாம்.

ஜரிகை, பீட்ஸ் வேலைப்பாடுகள் மீது பெர்ஃப்யூம் ஸ்ப்ரேயானால் அவை கறுக்க நேரலாம். தவிர்க்கவும்

ஒரு சில பெர்ஃபியூம் கள் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். பொதுவாகவே எந்த நறுமணத்திற்கும் தலைவலி அல்லது குமட்டல் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்போர் குறிப்பிட்ட பிராண்டை தேர்வு செய்யலாம்.

பெர்ஃபியூமை சோதனை முயற்சியிலேயே பயன்படுத்தி பார்க்கலாம்.

ஒவ்வொரு பெர்ஃபியூம்களையும் எடுத்த உடனேயே உடலில் அல்லது கைகளில் அடித்து பார்க்காமல். அதற்கென வைத்திருக்கும் டெஸ்டிங் காகிதங்களில் அடித்து நறுமணத்தை முகர்ந்து பார்க்கலாம்.

ஒரு அரை நாள் விட்டுவிட்டு அதில் எந்த அலர்ஜியோ அல்லது தலைவலி குமட்டல்

உள்ளிட்ட பிரச்னைகள் இல்லை என்றால் வாங்கிக் கொள்ளலாம்.

அவசரப்பட்டு வாங்கிவிட்டு அதை பயன்படுத்தவும் முடியாமல் பணம் விரயமாகாமல் இப்படி செய்வதால் தவிர்க்கலாம்.

முடிந்த அளவுக்கு இயற்கையாக தயாரிக்கப்பட்டதை பயன்படுத்தலாம்.

சருமத்திற்கும் நல்லது.