தினமும் வேர்க்கடலை சாப்பிடுங்க - நிபுணர்கள் பரிந்துரை!
வேர்க்கடலையில் பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் எனப்படும் ரிபோப்ஃபிளேவின், நியாசின், தயாமின், பேண்டோதெனிக் ஆசிட், விட்டமின் பி6 மற்றும் போலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
செரிமான மணடலம் சீராக இயங்க உதவுகிறது.
புரோட்டீன் சத்து நிறைந்தது. தினமும் ஒரு கப் சாப்பிடுவது சிறந்தது.
தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புதினா சாதம் ஆகிய சாத வகைகள் செய்யும் போது அதில் இரண்டு கைப்பிடி கடலையை தாளித்து சாப்பிடலாம்.
வீட்டிலேயே Peanut Butter தயாரித்து பிரெட் அல்லது சப்பாத்திகளுடன் சாப்பிடலாம். கடைகளில் கிடைப்பதில் சர்க்கரை மற்றும் செயற்கை நிறமிகள் அதிகம் சேர்க்கப்படுவது உடல்நிலைக்கு நல்லது அல்ல.
மதியம் உணவு சாப்பிடவுடன் ஒரு கடலை மிட்டாய் சாப்பிடலாம். ஏதாவது இனிப்பாக சாப்பிட வேண்டும் என்றாலும் கடலை மிட்டாய் சாப்பிடுவது நல்லது.
இதில் உள்ள மாங்கனீஸ் அமிலம், ரத்தத்தில் உள்ள மாவுச்சத்து மற்றும் கொழுப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது