ஒவ்வொருவரும் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் அதிகமாக தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
ஆனால் இரவில் தூங்க செல்லும் முன் நிறைய தண்ணீரை குடிக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது
இரவில் தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், மீண்டும் மீண்டும் பாத்ரூம் செல்ல வேண்டும். இதனால் தூக்கம் கெடலாம்
தூக்கம் சார்ந்த நோய் ஏற்கனவே இருந்தால் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, எடை அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்
சர்க்கரை நோய், இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மற்றும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் இரவில் தூங்கும் முன் அதிக தண்ணீர் குடிக்க கூடாது
இரவில் தூங்குவதற்கு சற்று முன் தண்ணீர் குடிக்கக் கூடாது. தூங்குவதற்கு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் முன்பு தண்ணீர் குடிக்கலாம்
சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம். இது இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தடுக்கும்
தினமும் சுமார் 8 மணி நேரம் தூங்குவது முக்கியம். குறிப்பாக இரவு நேரத்தில் தூக்கம் பாதிக்காமல் இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்