தாய்மார்கள் கவனத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது இந்த தவறை பண்ணாதீங்க!

Published by: விஜய் ராஜேந்திரன்

மூச்சுத் திணறல்

குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போது ஏற்படும் மூச்சுத் திணறலுக்குப் பின்னால் பொதுவான காரணம் உள்ளது

அதிகப்படியான பால்

அதிகப்படியான பால் வருவதன் காரணமாக குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அதிகப்படியான பால் கொடுப்பதால், குழந்தைக்கு இருமல் அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம்

குழந்தை தனது வாயை மூடினால்

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தனது வாயை மூடினால், பீதி அடைய வேண்டாம். இது குழந்தைகளில் ஒரு பொதுவான நிகழ்வு

பால் கொடுக்கும் முன்

குழந்தைக்கு பால் கொடுக்கும் முன் சிறிது பாலை பீய்ச்சி வெளியேற்றி விட்டு பின்னர் குழந்தைக்கு பால் கொடுக்கவும். இது பால் ஓட்டத்தை சீராக்க உதவுகிறது

குழந்தை அழும்போது

குழந்தைக்கு நிதானமான நிலையில் பால் கொடுக்கவும். மேலும், உங்கள் குழந்தை அழும்போது பால் கொடுப்பதை தவிர்க்கவும்

சைடாக படுத்து பால் கொடுக்கலாம்

சைடாக படுத்து கொடுப்பது அல்லது சாய்ந்த நிலையில் உட்கார்ந்து கொடுப்பது போன்ற சில நிலைகள் பால் ஓட்டத்தை மெதுவாக்க உதவும்

மருத்துவ ஆலோசனை

குழந்தைக்கு அடிக்கடி மூச்சுத் திணறும் போது கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்