குழுவாக செயல்பட குழந்தைகளை ஊக்குவிப்பது எப்படி?

Published by: விஜய் ராஜேந்திரன்

ஒற்றுமைக்கான பழமொழி

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, தனிமரம் தோப்பாகாது போன்றவை அந்தக் காலத்தில் இருந்து இந்த காலம் வரை சொல்லப்படும் ஒற்றுமைக்கான பழமொழிகள்

இணைந்து வாழ்வது

நாம் பிறப்பது முதல் இறுதிவரை இந்த உலகத்தில் உள்ள மற்றவர்களுடன் இணைந்து இயங்க வேண்டிய சூழல்கள் உள்ளது

தனிமனித சாதனை

தனிமனித சாதனைகள் என்பது அதைச் செய்த ஒரே ஒருவருக்கு மட்டுமே பெருமை தருகிறது

குழு வெற்றி

குழுவாக இணைந்து ஒரு செயலை சரியாக செய்யும்போது கிடைக்கும் வெற்றி அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் பெருமை சேர்க்கிறது

குழுவுடன் சேர்ந்து வெற்றி

ஒரு குழுவுடன் சேர்ந்து செயல்படும் தன்மை கொண்ட மனிதர்களே வாழ்வில் வெற்றிகரமான மனிதர்களாக இருக்கிறார்கள்

பகிர்ந்து கொள்ள வேண்டும்

குழுவாக இணைந்து வேலைகளைப் பகிர்ந்து செய்யும் போது எளிதாக இருப்பது மட்டுமல்ல, எப்படி செயல்பட வேண்டும், எதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தெரியும்

பிள்ளைகளுக்கு கற்றுத்தற வேண்டியது

பிள்ளைகளை சிறுவயது முதலே குழுவாக விளையாடவும், பழகவும் கற்றுத் தருவதே வெற்றிக்கு முதல்படி

எளிதில் வெற்றி அடையலாம்

பிள்ளைகள் எதிர்காலத்தில் ஒரு பணிக்கு செல்லும்போது ஒரு குழுவாக இணைந்து தன்னுடைய அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் வெற்றியை எளிதில் அடையலாம் என சொல்லிக்கொடுங்கள்