வீட்டிலே டைமண்ட் பேஷியல் செய்வது எப்படி?

Published by: விஜய் ராஜேந்திரன்

அழகியலில் ஆண்கள், பெண்கள்

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முக அழகில் அதிக கவனம் செலுத்துவார்கள்

ஃபேஸ் வாஷ்

தினசரி உபயோகிக்கும் ஃபேஸ் வாஷ் அல்லது சோப்பை கொண்டு நன்றாக முகத்தை கழுவி விட வேண்டும் பின்னர் பச்சை பால் அல்லது காய்ச்சி ஆற வைத்த பாலை எடுத்து நன்கு முகத்தில் தேய்க்கவும்

நன்று தேய்க்கவும்

மூக்கின் மீது இருக்கும் கரும்புள்ளிகள், கண்களின் அடிப்பகுதி, மற்றும் நிறம் மாறி இருக்கும் இடங்களில் நன்கு தேய்க்கலாம்

ஸ்க்ரப்

ஓட்ஸ் அல்லது கோதுமை மாவுடன் ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகிய மூன்றையும் கலந்து மெதுவாக முகத்தில் தடவலாம்

கழுவவும்

முகத்தை குளிர்ந்த நீரினாலோ அல்லது நீரில் நனைந்த துண்டை கொண்டோ துடைத்து விடவும் . வரட்சியான சருமத்திற்கு நல்ல பலனை தரும்

ஃபேஸ் பேக்

தயிரை காட்டன் துணியால் கட்டி அதில் இருக்கும் நீரை பிழிந்து எடுத்துக் கொண்டு அதனுடன் வடிக்கட்டிய பீட்ரூட் சாறை கலந்து கொள்ள வேண்டும்

மசாஜ்

முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்யலாம் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்தை பிரகாசமாக்க உதவும்

இதையும் ட்ரை செய்யவும்

சந்தனப்பொடி அல்லது கோதுமை மாவுடன் ரோஸ் வாட்டர் மற்றும் பால் கலந்து நன்றாக கலந்து முகத்தில் பூசி நன்கு உலர விடவும். காய்ந்த பின்னர் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரால் கழுவலாம்

பளிச் முகம் தயார்

கழுவிய பின்னர் சிறிதளவு ரோஸ் வாட்டர் அல்லது பாதம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணைய் எடுத்து முகத்தில் மெதுவாக தடவிக் கொள்ளவும்