நெடுஞ்சாலைகளில் செவ்வரளி வளர்க்கப்படுவது ஏன் தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

எல்லா பருவ நிலையிலும், எல்லா காலங்களிலும் வளரக் கூடியவை, செவ்வரளிச் செடிகள். இதன் மலர்கள், அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்களிலிருந்து வெளிவரும் புகைகளில் கார்பன் நச்சுகள் அதிகமாக இருக்கும்.

இந்த நச்சுவாயு, காற்றை அசுத்தமாக்குவதுடன், சாலையில் பயணிப்போருக்கும் சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

காற்று, ஒலி மாசுபாடு ஆகியவற்றை தடுப்பதற்காகவே இந்தச் செடிகள் நெடுஞ்சாலைகளில் வளர்க்கப்படுகின்றனர்.

இதன் காரணமாகவே இலைகள் பச்சை நிறத்திலிருந்து கொஞ்சம் கறுப்பு நிறமாகவும் மாறி இருக்கும். கவனித்துப் பாருங்கள்.

நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் அதிகமான அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை வறட்சியையும் தாங்கும் தன்மை கொண்டவை.

வாகனங்கள் தரும் இரைச்சலையும் குறைத்து, சத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் படைத்தவை.

விலங்குகள் இயற்கையாகவே இந்தத் தாவரத்தின் இலைகளை சாப்பிடாது. பராமரிப்பதும் எளிதானது.

இவை உயரமாக வளர்ந்தால் மக்கள் சாலையைக் கடக்கும்போது விபத்துகள் நேரலாம். அதனால் செடிகள் குறிப்பிட்ட உயரத்தில் வளர்க்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.