உங்க குழந்தை உருளைக்கிழங்கு மட்டுமே சாப்பிடுகிறார்களா? இதோ டிப்ஸ்!
குழந்தைகள், பள்ளி செல்பவர்கள் ஏன் சிலர் கல்லூரி பயிலும் வயதிலும் கூட உருளைக்கிழங்கு தவிர்த்து வேற ஏதும் சாப்பிட மாட்டார்கள். அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு உணவு முறையை எப்படி பழக்குவது?
பெரும்பாலான குழந்தைகளுக்கு சாப்பாடு என்றதும் உருளைக்கிழங்குதான் என்பார்கள். மூன்று வேளைகளுக்கும் உருளைக்கிழங்கு செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள்
உருளைக்கிழங்குக்கு பதில், சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஃப்ரென்ச் ஃப்ரைஸ், டோஸ்ட், ஏர் ஃப்ரை போன்றவற்றை க்ரிஸ்பியாக செய்து கொடுக்கலாம். கட்லட் செய்ய சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயன்படுத்தலாம்.
சாண்ட்விச் செய்து கொடுக்கும்போது இந்த சட்னியை தாராளமாகத் தடவி, உள்ளே காய்கறிகள், முட்டை அல்லது சிக்கன் போன்றவற்றில் ஒன்றை ஃபில்லிங்காக வைத்துக் கொடுக்கலாம்.
நிறைய காய்கறிகளை வேகவைத்து மசித்து பாஸ்தா சாஸ் அல்லது சாம்பாருடன் , கிரேவியுடன் சேர்த்துவிடுங்கள். இப்படிக் கொடுக்கும்போது காய்கறிகள் சேர்த்ததே தெரியாது என்பதால் குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்.
மில்லட் பாஸ்தா, மில்லட் நூடூல்ஸ் என செய்து கொடுக்கலாம். சாஸ் செய்யும்போது ப்ரோக்கோலி, பரங்கிக்காய், காளிஃப்ளவர் சேர்த்து கொடுக்கலாம். க்ரீமியாக சுவையாக இருக்கும்.
க்ரிஸ்பியாக கொடுத்து பழக்காமல், இதையும் டயட்டில் சேர்க்கலம். கொஞ்சம் கொஞ்சம் பழக்கப்படுத்தலாம்.
கொண்டைக்கடலை, ராஜ்மா வேகவைத்து மசித்து, உருளைக்கிழங்கு அல்லது சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் சேர்த்து கட்லட் செய்து பர்கர் உள்ளே வைத்துக் கொடுக்கலாம். இவற்றில் தோசை செய்து கொடுக்கலாம். மொறுமொறு தோசை உடன் சட்னி, சாம்பார் என கொடுத்தால் சாப்பிடுவார்கள்.
தோசை மீது டாப்பிங்க்ஸ் சேர்த்து கொடுக்கலாம். சிக்கன் துண்டுகள் அல்லது பனீர் துண்டுகள் சேர்க்கலாம். முட்டை தோசை என செய்து கொடுத்து முயற்சிக்கலாம்.