வளரும் குழந்தைகளுக்கு பச்சைப்பயறு ஏன் ஆரோக்கியமானது?
பச்சைப்பயறு அதிக புரோட்டீன் நிறைந்தது. தசை வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த உடலின் வளர்ச்சிக்கும் இது உதவும்.
வைட்டமின் சி, ஆன்டி - ஆக்ஸிடண்ட் உள்ளிட்டவி இருபப்தால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக இருக்க உதவும்.
எலும்பு வளர்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது.
இது எளிதாக செரிமானம் ஆகிவிடும். குழந்தைகளுக்கு தினமும் ஒரு கப் பச்சைப்பயறு கொடுக்கலாம்.
காம்ப்ளஸ் கார்போஹைட்ரேட் நிறைந்தது. புத்துணர்ச்சியாக இருக்க உதவும்.
இரும்புச்சத்து நிறைந்தது. இது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவும்.
இதில் உள்ள Folate மற்றும் பி வைட்டமின் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும். நினைவாற்றலை அதிகரிக்கும்.
குறைந்த அளவு கொழுப்பு, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது.
தினமும் ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பது நல்லது.