தேங்காய்களை நன்றாக துருவிக் கொள்ளவும். துருவிய தேங் காய்ப் பூவை நன்றாக பிழிந்து (நீர் கலக்காமல்) தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிழிந்த தேங்காய்ப் பாலை வாணலியில் இட்டுக் காய்ச்ச வேண்டும். சிறிது நேரத் தில் வாணலியின் அடியில் தேங்காய் எண்ணெய் படியும்.
வடிகட்டி எடுத்து விடவும். பாதுகாப்பாக ஸ்டோர் செய்யவும்.
வடித்த தேங்காய் எண்ணெயை தினமும் காலையிலும், மாலையிலும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், வாய்ப்புண், வயிற் றுப்புண் முதலியவை குணமடையும்.
இந்தத் தேங்காய் எண்ணெயை 5 மாதம் வரை குழந்தைகளுக்கு முடி, உடல் எனத் தேய்த்துக் குளிப்பாட்டினால், தோல் சம்பந்தப்பட்ட வியாதி வராது. வடிகட்டிய தேங்காய் துகள்களும் உடம்பிற்கும் நல்லது.
சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்குகிறது.
சரும நலனை பாதுகாப்ப தில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.
தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனால் தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும். குளிர்காலத் தோல் வறட்சியை நீக்கி சருமத்தை வனப்புடன் வைத்திருக்க உதவும்.