அலுவலக பணிக்கு இடையே பிரேக் எடுங்க!
சரியாக நிர்வகிக்கப்படாத பணியிட தொடர்பான மன அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் ஒன்று ' Burnout'.
வேலையின் இடையே பிரேக் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமானது. அதனால் மன அழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது, செயல்திறனை மேம்படுத்துகிறது என்று கூறுகிறார்கள்.
ஓய்வெடுக்க நேரத்தைக் கண்டுபிடிக்காமல் தொடர்ந்து வேலை செய்தால், அது ஆக்கப்பூர்வமாக வேலை செய்யும் திறனைத் தடுக்கிறது.
இது சோர்வைக் குறைக்கவும் உதவும் என்று குறிப்பிடுகிறது. ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வது, புதிய யோசனைகளை கொடுக்கும், படைப்பாற்றல் அதிகரிக்கும்.
தொடர்ந்து வேலை செய்வது மன அழுத்தத்திற்கு வித்திடும். மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
ஒவ்வொரு நிமிடமும் நம் மூளை புதிய தகவல்களைப் பெற்றுக்கொண்டே இருக்கிறது. மூளைக்கு ஓய்வெடுக்க சிறிது நேரம் கொடுப்பது, நாம் அதிகம் கற்றுக் கொள்ளவும், தகவலைத் தக்கவைக்கவும் உதவுகிறது.
நீண்ட நேரம் உட்கார்ந்து திறமையாக வேலை செய்ய முடியாது. நீண்ட நேரம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது. சிறிது நேரம் ஓய்வெடுப்பது, நம் கவனத்தை மீட்டெடுக்கும். நம் திட்டங்களை மறு பரிசீலனை செய்ய அனுமதிக்கும்.
வேலை செய்யும்போது சோர்வாக உணர்ந்தாலோ, ஓய்வு தேவைப்பட்டாலோ, ஒரு சிறிய பிரேக் எடுத்துக்கொள்ளலாம்.
உழைப்பைப் போலவே ஓய்வும் மிகவும் அவசியமானது.