ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?

Published by: ஜான்சி ராணி

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஏராளமான நன்மைகளை தரும்.

இதில் நார்ச்சத்து, வைட்டமின்ஸ், ஆன்டி - ஆக்ஸிடண்ட் நிறைந்ததுள்ளது. வெண்டைக்காய் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது டீடாக்ஸ் டிரிங்க்.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

செரிமான பிரச்சனைகள் இருப்பவர்கள் இரவில் தண்ணீரில் வெண்டைக்காய் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம்.

வெண்டைக்காய் ஊறவைத்த தண்ணீர் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வெண்டைக்காயில் Soulbe நார்ச்சத்து நிறைந்தது.

வெண்டைக்காய், வளவளப்பானது மட்டுமல்ல, பல்வேறு நோய்களைத் தீர்க்கும் பல்வேறு மருத்துவத்தன்மை நிறைந்தது.

அதிலுள்ள பெக்டின் (Pectin) மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.

எலும்புகள் வலிமை பெற்று ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) வராமல் தடுக்கப்படும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் இந்த வெண்டைக்காய் ஊறிய தண்ணீரை குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் பார்வை மேம்படும்.