ஆயிரத்தை குறிக்க K என்ற எழுத்தை பயன்படுத்துவது ஏன் தெரியுமா? இணையதளத்தில் ‘1000’ என்ற எண்ணிற்கு ஆங்கில எழுத்தான ‘K’ - வை பயன்படுத்தி வருகிறார்கள் மில்லியன் என்ற எண்ணிற்கு ‘M’ என்ற எழுத்தும், பில்லியன்-க்கு ‘B’ என்ற குறியீடும் பயன்படுத்தப்படுகிறது மேற்கத்திய நாடுகள் பலவும் கிரேக்கம் மற்றும் ரோமன் கலாச்சாரத்தின் தாக்கத்தையே அதிகம் கொண்டுள்ளன இந்த ‘K’ என்ற எழுத்தை பயன்படுத்துவதற்கும் மூலம் அங்கேதான் இருக்கிறது கிரேக்கம் மொழியில் ‘chilioi’ என்றால் ஆயிரம் என்று பொருள் கிரேக்க வார்த்தையான Chilioi என்பது பிரெஞ்சுக்காரர்களால் கிலோ என்று சுருக்கப்பட்டது அந்த ‘Kilo’ எனும் வார்த்தைக்கு ‘K’ என்ற குறியீடு கொடுக்கப்படுகிறது பில்லியன்-க்கு ‘B’ என்பதை போல ட்ரில்லியன் என்பதற்கு ‘T’ என குறிப்பிடப்படும் எனவே ஆயிரம் என்பதற்கு ‘T’ என்ற எழுத்து பயன்படுத்துவதில்லை அதனால் K என்று பயன்படுத்தப்படுகிறது