இறைச்சி, மீன், முட்டை பட்டாணி போல காளானிலும் அதிக புரதச்சத்து உள்ளது.
சிஸ்டின், ஹிஸ்ட்டிடின், லைசின், அஸ்பார்டிக் அமிலம், செரின், கிளை சின் மற்றும் மீத்தியோனைன் ஆகிய அமினோ அமிலங்களை யும் உணவுக்காளான்களில் உள்ளது.
நம்பிக்கையான கடை களில் சீல் செய்யப்பட்ட பாலிதீன் பாக்கெட்டில் வரும் காளான்களையே வாங்க வேண்டும்
கசப்பாக, அடர் நிறத்துடன் நாற்றமடிக்கும் காளான்களை வாங்காதீர்கள்.
பால் மாதிரி வெள்ளைக் கசிவு இருந்தாலோ, வெங்காயத்துடன் சேர்த்து வதக்கும் போது நிறம் மாறினாலோ, காளானை நறுக்கிய சிறிது நேரத்தில் நிறம் மங்கி, சிறுத்துப் போனாலோ, அதை உணவில் பயன்படுத்தாதீர்கள்.