சூயிங் கம் என்பது ஒரு வகை ஒட்டக்கூடிய எலாஸ்டிக் பொருளாகும் இந்த சூயிங் கம்மை மணிக்கணக்கில் மெல்லலாம் சிலர் தெரியாமல் இதை விழுங்கி விடுவார்கள் வயிற்றுப் பகுதியில் இருக்கும் இது வெகு நேரம் செரிமானம் ஆகாமல் இருக்கும் நமது உடலில் கடைசி வரை இது ஜீரணம் ஆகாது குடலில் பொறுமையாக நகர்ந்து மலத்தின் வழியாக வெளியேறிவிடும் அதனால் பெரிதாக பயப்பட வேண்டாம் வயிற்று வலி, வாந்தி மற்றும் மலச்சிக்கல் ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும்