முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா? இந்த நட்ஸை தினமும் சாப்பிடுங்க!

Published by: விஜய் ராஜேந்திரன்

வால்நட்

ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட் , செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது

வால்நட்

வால்நட்ஸ் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் காரணமாக வயதான தோற்றம் தள்ளிப்போடப்படுகின்றது. சருமம் நீண்ட காலத்க்கு இளமையாகவே இருக்க உதவும்

பாதாம்

பாதாமில் க்ரீன் டீ மற்றும் ப்ரோக்கோலியில் உள்ள ஃபிளாவனாய்டு உள்ளது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இது உங்கள் சருமத்திற்கான வயது எதிர்ப்புப் பண்பை மேம்படுத்த உதவுகின்றது

பாதாம்

பாதாமில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் ஏற்படுவதை தடுத்து சரும அழகை பாதுகாக்கின்றது

பூசணிக்காய் விதைகள்

வைட்டமின் ஈ உட்பட பூசணி விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும பாதுகாப்புக்கு பெரிதும் உதவுகின்றது

பூசணிக்காய் விதைகள்

சருமத்தின் இயற்கையான எண்ணெய் அளவை சீராக வைத்துக்கொள்வதன் மூலம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து சரும பொலிவை அதிகரிக்கின்றது

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளில் செலினியம் அதிகளவில் காணப்படுகின்றது. இது வயதான தோற்றத்தை தடுக்கும் முகப்பரு மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளை நீங்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம், தோல் மற்றும் முடியையும் மேம்படுத்தும். இது உங்கள் கூந்தல் மற்றும் சரும அழகையும் பாதுகாக்க உதவும்

பிஸ்தா

பிஸ்தாவில் தியாமின், வைட்டமின் பி6, மாங்கனீஸ், பாஸ்பரஸ் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றது.மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா கட்டுப்படுத்த உதவும்

பிஸ்தா

சூரிய கதிர்களால் சருமத்துக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாத்து சருமத்துக்கு பொழிவை கொடுக்கின்றது