உங்கள் குழந்தைகளை எத்தனை வயது வரை உங்களுடன் தூங்க வைக்கலாம் தெரியுமா

Published by: விஜய் ராஜேந்திரன்

தூங்கும் விதங்கள்

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமான தூங்கும் விதங்கள் இருக்கும். சில குழந்தைகள் தலையணைகள், போர்வைகள் மற்றும் பொம்மைகளுடன் தூங்குவார்கள்

பெற்றோருடன் தூங்கும்

பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் தூங்கும் பழக்கத்தை வழக்கமாகவே கொண்டுள்ளனர்

தனியாக தூங்க

திடீரென உங்கள் பிள்ளையை தனியாக தூங்க வற்புறுத்தாதீர்கள். எந்த குழந்தையாக இருந்தாலும் திடீரென தனியாக இருக்கப் பழகிவிடாது.

தனியாக தூங்க வையுங்கள்

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தனியாக தூங்க வையுங்கள். அதன் பின்னர் தனியாக தூங்கும் நாட்களை படிப்படியாக அதிகரிக்கவும்

ஃபிரஷ் அப்

தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் உங்கள் குழந்தைகளை ஃபிரஷ் அப் செய்து நைட் டிரெஸ் போட்டு விட்டு தூங்க வைக்க வேண்டும்

கதை சொல்லி தூங்க வைக்கலாம்

அவர்களை மெத்தையில் தூங்கும் நிலையில் படுக்க வைத்து, போர்வைகளை போர்த்தி அருகில் அமர்ந்து நல்ல கதை ஒன்றை சொல்லி தூங்க வைக்கலாம்

அசௌகரியங்கள் ஏற்படலாம்

சிறு பிள்ளையாக இருக்கும் வரை சரி, ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்கள் பெரியவர்களாக வளரும்போது ஒரு சில அசௌகரியங்கள் ஏற்படலாம்

8 வயதிலிருந்து

படிப்படியாக குழந்தைகளை 8 வயதிலிருந்தே தனித்தனியாக தூங்க வைக்க முயற்சி செய்யலாம்.

சமாளிக்கும் திறன்

8 வயதிற்கு பின்னர் குழந்தைகள் பெரியவர்களாக தொடங்குகிறார்கள். எதனையும் சமாளிக்கும் திறனும் வளரத் துவங்குகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.