சளி, இருமல் குணமாக உதவும் டிப்ஸ் இதோ!

சுத்தம்

வீட்டைவிட்டு வெளியே சென்று வந்தால் கை, கால் சோப்பு போட்டு சுத்தம் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. 

மாத்திரை வேண்டாம்; அவசியம் தவிர

பொதுவாக சளி பிடித்திருந்தால் அதற்கு மருந்துகள் சாப்பிடுவது அதை வெளியே வரவிடாமல் செய்துவிடும். அதற்கு பதிலாக இயற்கை முறையில் அதை குணப்படுத்த சாப்பிடுவது நல்லது.” என்று நிபுணர் விளக்கம் அளிக்கிறார். 

ஆவி பிடிப்பது

தலையில் நீர்கோர்த்து இருந்தால், சளி, மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் அதை சரிசெய்ய ஆவி பிடிப்பது நல்லது. இந்த முறை எல்லாருக்கும் ஏற்றதாக இருக்காது.

வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

மூச்சுப் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு உகந்தது இல்லை.

ஓய்வு அவசியம்

சளி இருக்கும்போது அதிகப்படியாக நடப்பது, உடற்பயிற்சி செய்வது,வியர்வை வரும்படி ஏதாவது செய்வதை தவிர்க்கவும்.

தேன் சளி, இருமல், தொண்டைப் புண் ஆகியவற்றை சரிசெய்யும் திறன் கொண்டது. இஞ்சி, மிளகு, மஞ்சள், பட்டை, எலுமிச்சை சாறு சேர்ந்த தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது இருமல், சளி பிரச்சனையை சரிசெரிய்ய உதவும்.

இருமல், தொண்டை எரிச்சல் இருந்தால் தினமும் இரண்டு வேளை மிதமான சுடு நீரில் உப்பு சேர்த்து நன்றாக வாய் கொப்பளிக்கலாம்.