உணவில் சேர்க்கப்படும் மசாலாவை வைத்து உடம்பை குறைக்கலாமா?

Published by: விஜய் ராஜேந்திரன்

உடல் பருமன்

உடல் பருமன் என்பது பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதை சரி செய்ய மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்

பாரம்பரிய மசாலா பொருட்கள்

நமது இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் சில பாரம்பரிய மசாலா பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பதோடு கலோரிகளை வேகமாக எரிக்க உதவும்

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் உள்ளது. இதில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன

இஞ்சி

இஞ்சியில் உஷ்ணத்தன்மை உள்ளது. இது உடலின் சீதோசன நிலையை அதிகரிக்க உதவுகின்றது. உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கலோரிகளை விரைவாக அகற்ற உதவும்

கருப்பு மிளகு

கருப்பு மிளகில் பைப்பரின் உள்ளது. உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்பு சேர்வதை இது தடுக்கின்றது

சீரகம்

ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ள சீரகம் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி செரிமானத்தை சீராக்குகின்றது. கலோரிகளை விரைவாக எரிக்கவும் தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவும்

இலவங்கப்பட்டை

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தினமும் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிக்கலாம். தண்ணீரில் இலவங்கப்பட்டையை போட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி அருந்தலாம்

கடுகு

கடுகு ஒரு சக்தி வாய்ந்த மற்றும் உணவுக்கு சுவை கொடுக்கும் மசாலா. மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், கலோரிகளை எரிக்கவும் கடுகு பயன்படுகிறது

மருத்துவ ஆலோசனை

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்