பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்கள் உணவு சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி மேற்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களை சீர் செய்யவும் உதவுகிறது
ஜாக்கிங், ஸ்விம்மிங், ஹைக்கிங், ரோயிங், சைக்கிளிங் போன்ற இதயத்துடிப்பை அதிகரிக்கக்கூடிய கார்டியோ உடற்பயிற்சிகள் செய்யலாம்
ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சி ரத்த அழுத்தம் மற்றும் மெட்டபாலிசத்தை சீராக்க உதவுகின்றன
வாரத்திற்கு 3 நாட்களுக்கு யோகா செய்வது, டெஸ்டோஸ்டிரோன் மற்றும் DHEA அளவுகளை கட்டுப்படுத்தி, மாதவிடாய் சுழற்சியை சீராக உதவும்
மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் மிதமான பயிற்சிகளுக்குப் பதிலாக புஷ்-அப்கள் மற்றும் ட்ரைசெப் போன்ற தீவிரமான பயிற்சிகளை செய்தால் உடல் எடையை விரைவாக குறைக்கலாம்
உயர்-தீவிர இடைவெளி பயிற்சி அல்லது HIIT என்பது அதிதீவிரமான பயிற்சிகளுக்கு நடுவே சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் தொடருவது ஆகும்