மாதவிடாய் குறைவாக வருகிறதா? முறையற்ற மாதவிலக்கு வர காரணங்கள்

Published by: விஜய் ராஜேந்திரன்

மாதவிடாய் சுழற்சி

பொதுவாக 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.சிலசமயம், ஒரு சில நாள் முன்போ, அல்லது பின்போ மாதவிலக்கு வரலாம்

சீரற்ற மாதவிடாய்

21 நாளைக்கு முன்பாகவோ அல்லது 35 நாட்களுக்கு பின்போ மாதவிடாய் ஏற்பட்டால் அது சீரற்ற மாதவிடாய் எனலாம்

சீரற்ற மாதவிடாய் சுழற்சி

3 அல்லது அதற்கும் மேற்பட்ட மாதங்களுக்கு மாதவிடாய் உண்டாகாமல் இருந்தாலோ சீரற்ற மாதவிடாய் சுழற்சி

ஹார்மோன் கோளாறுகள்

ஹார்மோன் கோளாறுகள், தைராய்டு இயக்கம் சீரற்று இருப்பது, கர்ப்பப்பை கோளாறுகள் காரணமாக இருக்கலாம்

அதிக எடை இழப்பு

அதிக எடை இழப்பு காரணமாக மாதவிடாய் வழக்கத்தைவிட குறையலாம்

குடும்பக்கட்டுப்பாடு மாத்திரை

குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகளை சாப்பிடுவதாலும், குறைவான மாதவிடாய் ஏற்படலாம்

பிசிஓஎஸ் ஹார்மோன்

பிசிஓஎஸ் எனப்படும் ஹார்மோன் கோளாறுகள் இருந்தாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்

தைராய்டு ஹார்மோன்

தைராய்டு உடலில் உள்ள ஹார்மோன் மாற்றத்தை உண்டு செய்யும். இது உடலின் வெப்பநிலை, மெட்டபாலிசம் போன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது

நிபுணரிடம் ஆலோசனை

இதுபோல் அறிகுறிகள் இருந்தாலும், உடனடியாக மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது