வாகை பூவில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா?

Published by: பிரியதர்ஷினி

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வாகை பூவை சேர்த்து தேநீராக குடித்து வந்தால் வாதம், பித்தம் சீராகும்

வாகை பூவின் இலைகளை அரைத்து கண்களில் கட்டிக் கொண்டால் கண் வீக்கம், கண் சிவந்துபோதல், கண் வலி பிரச்சனை குறையலாம்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொத்ததும், வாகை பூ மொட்டை சேர்த்து தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி, வயிற்று போக்கு குணமாகலாம்

ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் ஊற்றி சூடானதும் வாகை பூவின் இலையை அரைத்து சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். அதன் பிறகு ஆற வைத்து பற்றாக போட்டு வந்தால் மூட்டுவலி கை, கால் வலி குறையலாம்

வாகை மரத்தின் வேர் பட்டைகளை பொடியாக அரைத்து பல் துலக்கி வந்தால் ஈறு பாதிப்புகள் குணமாகலாம்

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வாகை மலர், மிளகு பொடி சேர்த்து பாதி அளவு வந்ததும் ஆறவ வைத்து குடித்து வந்தால் கை, கால்களில் ஏற்படும் வலி குறையலாம்

வாகைமரத்தின் வேர் பட்டைகளை நன்கு பொடியாக்கி அதில் பல் துலக்கி வந்தால் ஈறு பிரச்சனைகள் குணமடையும்

உடலில் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கவும் பயன்படுகிறது