சமையலறை பொருட்களையே லிப் பாமாக பயன்படுத்தலாம் பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ, ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன புற ஊதா கதிர்வீச்சால் ஏற்படும் சேதத்திலிருந்து நம் உதடுகளை பாதுகாக்க உதவும் தேங்காய் எண்ணெய் வறண்ட உதடுகளுக்கு ஊட்டம் அளித்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும் ஆலிவ் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவும் ஷியா வெண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஏ, பி,ஈ உதடுகளுக்கு ஊட்டம் அளிப்பதுடன் ஈரப்பதமாக வைத்துக் கொள்ளவும் உதவும் கோகோ வெண்ணெயில் பைட்டோ செர்னிகல்ஸ் உள்ளது இது ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதடுகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படும் ஜொஜோபா எண்ணெயில் வைட்டமின் ஏ, பி சத்துக்கள் உள்ளன இது வறண்ட உதடுகளுக்கு ஈரப்பதத்தை அளித்து மென்மையாக வைத்திருக்கும்