இதை செய்யுங்க.. இனி குறட்டையே வராது! மூக்கடைப்பு, மூக்கு இடைச்சுவர் வளைவு, சைனஸ் தொல்லை, டான்சில் வளர்ச்சி, தைராய்டு பிரச்னை போன்றவையும் குறட்டைப் பிரச்னையை உருவாக்குகின்றன மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வுநிலையில் நாக்கு சிறிது உள்வாங்கி, தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும், மூச்சுப்பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டைச் சத்தம் உருவாகிறது மல்லாந்து படுப்பதைத் தவிர்ப்பதுடன், ஒருபக்கமாக ஒருக்களித்துத் தூங்கினால் குறட்டை ஏற்படுவதை தவிர்க்கலாம் உயரமான தலையணையை தலைக்கு வைத்துப் படுப்பதன் மூலம் குறட்டை ஏற்படுவதைத் தவிர்க்கலாம் புகைபிடிப்பது, மது அருந்துவது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படலாம் தூங்கச் செல்வதற்கு முன்னர் துரித உணவுகள், கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உண்பதைத் தவிர்த்து குறட்டையை கட்டுப்படுத்தலாம் குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முடிவடையும் காலத்தில் இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனவே, மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையின் பேரில், முறையான சிகிச்சை எடுத்து, சரிப்படுத்துவதே சிறந்தது