நிம்மதியான உறக்கத்துக்கு நறுமண எண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள்! மன அழுத்தத்தைக் குறைவத்து, ஒரு நல்ல இரவு தூக்கத்தை பெற பல அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன இயற்கை எண்ணெய்கள் பல நூற்றாண்டுகளாக தூக்கம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வாக பயன்படுத்தப்படுகின்றன ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு ஒரு நல்ல தூக்கம் அவசியம் லாவெண்டர் எண்ணெய் என்பது நன்கு அறியப்பட்ட இயற்கை எண்ணெய், இது கவலையைத் தணிக்கும் என நம்பப்படுகிறது இது பதட்டத்தை நிர்வகிக்க உதவுவது மட்டுமல்லாமல், தூக்கப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் சூடான குளியல் நீரில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெயைச் சேர்க்கலாம் தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் உட்பட பல எண்ணிக்கையிலான மக்களுக்கு இந்த எண்ணெய் பயனளிக்கும் ரோஜா இதழ்களிலிருந்து பெறப்பட்ட இந்த எண்ணெய் ரோஜாக்களின் அதே உற்சாகமூட்டும் வாசனையைக் கொண்டது அடிவயிற்றில் ரோஜா எண்ணெயை மசாஜ் செய்வதன் விளைவாக மாதவிடாய் அசௌகரியம் குறைந்து பதட்டத்தை தனிக்கும்