ஒரே இரவில் பளபளப்பான சருமத்தை பெற இதை யூஸ் பண்ணுங்க! சருமத்தில் இருக்கும் அழுக்கு, அசுத்தங்களை அகற்ற தேங்காய் எண்ணெய் உதவும் முதலில் மென்மையான கிளென்சர் மூலம் முகத்தை கழுவ வேண்டும் ஈரமான தோலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யவும் இப்படி மசாஜ் செய்தால், எண்ணெய் ஆழமாக ஊடுருவி ஈரப்பதத்தை தக்க வைத்து சருமத்தை பிரகாசிக்க செய்யும் கண்களுக்கு கீழே தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்தால், கண்கள் அழகாக இருக்கும் கருந்திட்டுகள் மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராட உதவலாம் தூங்கும் போதும் உங்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிலருக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், பருக்கள் தோன்றும் அதனால், மருத்துவரின் ஆலோசனை பெற்று பேட்ச் டெஸ்ட் செய்த பின் இதை பயன்படுத்தவும்