தூக்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி நம் அனைவருக்குமே தெரியும் உடலும் மனதும் புத்துணர்ச்சி பெற, உறக்கம் மட்டும் போதாது. ஓய்வும் தேவை ஓய்வு என்பது ஒன்றும் செய்யாமல் இருப்பது இல்லை. ரிலாக்ஸாக ஒரு செயலில் ஈடுபடுவதுதான் ஓய்வு உடலுக்கு ஓய்வு கொடுக்க சிம்பிளான யோகா செய்யலாம் மனதிற்கு ஓய்வு கொடுக்க தியானம் செய்யலாம். இயற்கையுடன் நேரத்தை செலவிடலாம் உணர்ச்சிகளுக்கு ஓய்வு கொடுக்க உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடலாம் சமூகத்தில் இருந்து ஓய்வு பெற, தனியாக இருங்கள் உணர்திறன் ஓய்வு வேண்டும் என்றால் அமைதியான இடங்களில் நேரத்தைச் செலவிடலாம் கிரியேட்டிவ் ஓய்வு வேண்டும் என்றால் படைப்பாற்றல் சார்ந்த செயல்களில் ஈடுபடுங்கள் ஆன்மிக ஓய்வு தேவைப்பட்டால் இறையை உணர முயற்சிக்கலாம்