அதான் சுண்டைக்காய் இருக்குல.. செரிமான கோளாறுக்கு பாய் சொல்லுங்க! வற்றல் ரகங்களிலேயே மிகவும் ஃபேமஸ் என்றால் அது நம்ம சுண்டைக்காய் வற்றல்தான் சுண்டைக்காய் குட்டியாக, இருந்தாலும் அது கொடுக்கும் நன்மைகள் தனித்துவமானவை இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தனிமங்களும் அதிகம் உள்ளது வயிற்றில் இருக்கும் கிருமிகளை அழிக்க உதவும் செரிமான பாதையைப் பாதுகாக்க உதவுகிறது கழிச்சல் நோயைக் கட்டுக்குள் வைக்க சுண்டை வற்றலை நன்றாகப் பொடி செய்து, தயிரில் கலந்து சாப்பிடலாம் சுண்டையின் பழங்களை அரைத்து, நெற்றியில் பற்று போட்டால், தலைவலி குறையலாம் குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் குழந்தைகளின் மலத்தில் புழுக்கள் தென்பட்டால், சுண்டைக்காயை பொடியாக்கி தரலாம்