ஜெல்லி கிரிஸ்டல் பாக்கெட் ஒன்றை கொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ளபடி ஜெல்லி தயாரிக்கவும் பின் ஜெல்லிகளை உங்களுக்கு வேண்டிய வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளவும் ஒரு மணி நேரம் ஊற வைத்த 250 கிராம் ஜவ்வரிசியை வேக வைக்கவும் வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளவும் ஒரு லிட்டர் பாலை காய்ச்சி ஆற வைத்து அதனுடன் கால் கப் சர்க்கரை சேர்க்கவும் அரை ஸ்பூன் ரோஸ் சிரப், வேக வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கலக்கவும் இதை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறலாம். சுவை சூப்பரா இருக்கும்