6 தக்காளிகளை கைகளால் நன்கு பிசைந்து இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்



11 பூண்டு பற்கள், சிறிது கொத்தமல்லி இலை, அரை ஸ்பூன் மிளகு எடுத்துக் கொள்ளவும்



அரை ஸ்பூன் சீரகம், 5 கறிவேப்பிலை இலைகள் சிறிது துண்டு இஞ்சி எடுத்துக் கொள்ளவும்



இவை அனைத்தையும் இடி கல்லில் சேர்த்து இடித்துக் தக்காளி சாறில் சேர்க்கவும்



கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 5 காய்ந்த மிளகாய், கடுகு சேர்க்கவும்



ஒரு துண்டு பெருங்காய தூள் சேர்த்து தக்காளி சாறு, சிறிது புளிகரைசலை சேர்க்கவும்



தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்